Header Ads



எனது வீட்டில் அழுத்தம் கொடுத்ததாலே, நிதி அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்தேன் - அலி சப்ரி


- Nirupama Subramanian -

கொரோனா தொற்றால் இறக்கும் இலங்கை முஸ்லிம்களை புதைக்கக் கூடாது என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது.

அந்த சமயத்தில் தான் ஒரு முஸ்லிமாக அப்போது நீதி அமைச்சராக இருந்த அலி சப்ரி.

இதற்கு அவருடைய சமூகத்தைச் சேர்ந்தவர்களே விமர்சனங்களை முன்வைத்தாலும் அதையெல்லாம் இவர் பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

தற்போது 51 வயதாகும் அவர் இலங்கையின் புதிய நிதி அமைச்சர் ஆவார். இலங்கையின் பொருளாதாரம் அதள பாதாளத்துக்கு சென்றிருக்கும் வேளையில் இந்தப் பணி இவருக்கு மிகவும் கடினமானதாகும்.

நிதி அமைச்சராக பசில் ராஜபக்சே பதவி வகித்து வந்தார். நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமடைந்து கொண்டே செல்லும் நிலையில், மக்கள் போராட்டத்தில் குதிக்கத் தொடங்கினர்.

இதையடுத்து, தனது பதவியை ராஜிநாமா செய்தார் பசில் ராஜபக்சே. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகிய இருவரின் யோசனை காரணமாகவே பசில் ராஜபக்சே பதவியை ராஜிநாமா செய்தார்.

அதையடுத்து, அவரது இடத்துக்கு அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் அவர் இந்தப் பதவி தனக்கு வேண்டாம் என ராஜிநாமா கடிதம் அனுப்பினார். ஆனால், அவரது ராஜிநாமா கடிதத்தை அதிபர் ஏற்கவில்லை.

இதுதொடர்பாக தி சன்டே எக்ஸ்பிரஸுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:

அரசு அளித்திருக்கும் புதிய பொறுப்பை நிறைவேற்ற முடிவு செய்திருக்கிறேன். நான் பொருளாதார நிபுணர் அல்ல. எனக்கு இந்தத் துறையில் அனுபவம் கிடையாது. எனவே, இந்தப் பதவிக்கு அதற்கு உரிய தகுதியான நபரை நியமிக்க வேண்டும். அதன் காரணமாகவே நான் எனது பதவியை ராஜிநாமா செய்தேன். நான் 4 முதல் 5 நாட்கள் வரை காத்திருந்தேன். ஆனால், யாரும் இந்தப் பொறுப்பை ஏற்க தயாராக இல்லை.

எனவே, தற்போதைய நிலையை நான் உணர்ந்து கொண்டேன். இந்திய அரசிடம் பேச வேண்டும். சர்வதேச நிதியத்திடம் பேச வேண்டும். இதற்கு ஒரு நபர் இலங்கையின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

எனவே, தயக்கம் இருந்தாலும் நான் எனது ராஜிநாமா முடிவை திரும்பப் பெற்றேன். என்னால் முடிந்ததை செய்வேன்.

எனது வீட்டில் அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவே நான் பதவியை ராஜிநாமா செய்ய முடிவு செய்தேன். மேலும், நான் இந்த பொறுப்புக்கு சரியாக இருப்பானே என்றும் எனக்கு நெருக்கமானவர்கள் சந்தேகித்தார்கள்.

நான் பொறுப்பை தட்டிக் கழிக்காமல் இதை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். இது மிகவும் கஷ்டமான பணி தான். இருப்பினும், இலங்கையின் இன்றைய நிலையை மாற்றுவதற்கு நான் எனது பங்களிப்பை அளிக்க வேண்டும்.

இலங்கையின் முக்கிய அமைப்புகளான மத்திய வங்கி, மேலும் வங்கிகள், பரிவர்த்தனை கேட்வேக்கள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்றார் சப்ரி.

4 comments:

  1. ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே.

    ReplyDelete
  2. Furkanhaj says:-நாட்டை காப்பதல்ல.கோத்தபாயாவை காப்பதே உங்கள் நோக்கம்.பல வருடங்களாக அதைத்தானே செய்து வருகிறீர்கள்.உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்.கோதபாயா குற்றமற்றவரா?அல்லாஹுககு பயந்து கொள்ளுங்கள்.மரணத்துக்கு பயந்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. He is also one of the dirty cunning dogs of MR thieves. He tries to protect his owners for the rest of the food and bones.

    Now, he behaves like a school boy to others in his community.

    This disgusting dog should be sentenced to prison with the MR family.

    ReplyDelete
  4. He is also one of the dirty cunning dogs of MR thieves. He tries to protect his owners for the rest of the food and bones.

    Now, he behaves like a school boy to others in his community.

    This disgusting dog should be sentenced to prison with the MR family.

    ReplyDelete

Powered by Blogger.