கோட்டா கோ கம போராட்டத்தை அழிக்க முயற்சிக்கும் அடிப்படைவாத அணிகள் - பேராசிரியர் ரோஹன குற்றச்சாட்டு
காலிமுகத் திடலில் அமைந்துள்ள எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை அவமதிக்கும் வகையில் செயற்பட்டவர்கள் கோட்டா கோ கம போராட்டத்தை அழிக்க முயற்சிக்கும் அடிப்படைவாதிகள் மற்றும் பிரிவினைவாத அணிகள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் இயங்கும் போராட்ட களத்திற்குள் பல்வேறு அடிப்படைவாத மற்றும் பிரிவினைவாத சக்திகள் செயற்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கூறியுள்ளார்.
இதற்கு உதாரணமாக அண்மையில் பண்டாரநாயக்க உருவச் சிலை சம்பந்தமாக நடந்த சம்பவத்தை அடையாளப்படுத்தலாம். இதனடிப்படையில், பண்டாரநாயக்க உருவச் சிலை சம்பந்தமாக நடந்த சம்பவம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கவலையை வெளியிடுகிறது.
உடனடியாக அந்த உருவச் சிலைக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ரோஹன லக்ஷ்மன் பியதாச கூறியுள்ளார்.
அனுராதபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Post a Comment