பிரதமரும், அமைச்சரவையும் பதவி விலகியபின் இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கத் தயார் - கடிதம் அனுப்பினார் ஜனாதிபதி
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் பங்கேற்புடனும், இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது இணக்கத்தை தெரிவித்துள்ளார்.
அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் ஜனாதிபதி இதனை அறியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பிரதமரும், அமைச்சரவையும் பதவி விலகியதன் பின்னர் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் தான் இணங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, முதல் கட்டாக எதிர்வரும் 29ஆம் திகதி விசேட கூட்டத்திற்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
Post a Comment