Header Ads



ஜனாதிபதி, பிரதமர் பதவிகளால் எனக்கு எந்தப் பயனும் இல்லை - அதிகாரத்தைப் பெறுவதிலும் ஆர்வமில்லை


ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளால் தனக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் அதிகாரத்தைப் பெறுவதில் தனக்கு ஆர்வமில்லை என்றும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் ஆணைக்கு தலைவணங்குவேன் என்று தெரிவித்தார்.

நேற்றையதினம் (12) விடுத்த விசேட அறிக்கையில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்தாவது,

தமக்கு அதிகாரம் கிடைத்தால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அரசாங்கம் உட்பட நாட்டுக்கு அழிவை ஏற்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் இன்றைய கருத்து என்றும் பொதுமக்கள் தமது குறைகளுக்கு தீர்வுகளை எதிர்பார்க்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

உண்மைகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறிய அவர், அதிகாரத்தைப் பெறுவதில் தனக்கு ஆர்வமில்லை என்றும் கூறினார்.

மாற்றத்தை உறுதி செய்யும் அதே வேளையில் நாட்டு மக்களுக்கும் இளைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை இரத்து செய்யவும், 19 ஆவது திருத்தத்தை மேலும் வலுப்படுத்தவும் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.