ஈஸ்டர் தாக்குதலுக்காக பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி - கறுப்பு ஆடைகளில் எதிர்க்கட்சிகள்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸாவின் வேண்டுகோளுக்கு இணங்க, 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது.
மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று முன்னணி ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தினர்.
அதே நாளில், தெமட்டகொடையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தெஹிவளையில் உள்ள தங்கும் விடுதியில் சிறிய அளவிலான வெடிவிபத்துகள் ஏற்பட்டதுடன், இந்த வெடிப்பு சம்பவங்களில் 269 பேர் கொல்லப்பட்டனர்.
45 வெளிநாட்டவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உட்பட குறைந்தது 500 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment