ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை கட்சியொன்றை உருவாக்கி நாடாளுமன்றத்தில் பிரவேசிக்க அனுமதிக்குமாறு நாமல் கோரிக்கை
அரச தலைவர் செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை கட்சியொன்றை உருவாக்கி நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்த அனுமதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (21) நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆளும் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான அவர், ‘கோட்டாகோகம’ இடம் இளைஞர்களால், இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட இடம் என்றும், அவர்களில் பலர் தங்கள் நோக்கத்தில் நேர்மையானவர்கள் என்றும் கூறினார்.
எனவே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, மிதவாத கட்சியாக செயற்படும் இளைஞர்களை சந்தித்து, தலையிட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உதவியுடன் இளைஞர்களை அரசியல் கட்சியொன்றை உருவாக்குவதற்கு உதவுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இளைஞர்களின் போராட்டத்தை ஏனைய அரசியல் கட்சிகள் கடத்துவதற்கு இடமளிக்க வேண்டாம் எனவும் அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment