Header Ads



இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி


கொழும்பு செட்டித் தெருவில் இன்று (06) தங்கத்தின் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, 22 கெரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 175,800 ரூபாவாகவும் மற்றும் 24 கெரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 190,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, கடந்த வாரத்தில் 22 கெரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 195,000 ரூபாவாகும் மற்றும் 24 கெரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 205,000 ரூபாவாகும் கொழும்பு செட்டித் தெருவில் பதிவாகி இருந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் 24 கெரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 250,000 ரூபா வரை அதிகரித்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.