Header Ads



மக்களின் போராட்டத்தை திசை திருப்ப அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்துகிறது


மக்களின் போராட்டத்தை திசை திருப்ப அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.

மக்களின் நிலைப்பாட்டுக்கு செவிசாய்த்து, பதவி விலகுவதை தவிர ராஜபக்சவினருக்கு வேறு மாற்று வழிகள் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மிக மோசடி அவமதிப்புக்கு உள்ளாகி இருக்கும் அரசாங்கம் பல ஒட்டுக்களை போட்டு, பலரை பணம் கொடுத்து வாங்கி, தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க தோல்வியான முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.

உலகம் முழுவதும் ராஜபக்சவினருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலைமையில், போராட்டங்கள் பல நாட்களாக தொடர்ந்தும் நடைபெறும் சூழ்நிலையில், இவர்கள் ஒவ்வொரு வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர்.

பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார், மக்கள் அமைதியடையவில்லை. அதற்கு முன்னர் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார், அமைதியடையவில்லை.

அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலகினர் அப்போதும் மக்கள் அமைதியடையவில்லை. இடைக்கால அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தனர். அப்போதும் மக்கள் அமைதியடையவில்லை. பழையவர்கள் நீக்கி விட்டு, புதிய அமைச்சர்களை நியமித்தனர் அதுவும் எடுப்படவில்லை.

காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து போராட்டம் என்ற வெள்ளத்தில் அடித்துச் செல்லும் போது புல்லை பிடித்து தற்காத்துக்கொள்ள முயற்சிப்பதாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இதனால் ராஜபக்சவினர் பதவி விலகுவதை விட வேறு மாற்று வழி கிடையாது நான் நினைக்கின்றேன் எனவும் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.