இந்த மாற்றம், நாடு பூராகவும் ஏற்படுமா..?
மத்துகம நகரில் நிர்மாணிக்கப்பட்ட பாதசாரி சுரங்கப்பாதை நகர வர்த்தக சமூகம் மற்றும் இளைஞர்கள் இணைந்து பொதுமக்களின் பாவனைக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த சுரங்கப்பாதை மக்களால் மக்களிடம் ஒப்படைக்கப்படுவது இதன் சிறப்பு.
மத்துகமவில் மாற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ள தாகவும், பொது மக்களின் பணத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களையோ திட்டங்களையோ இனி பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் திறந்து வைக்க அனுமதிக்கக் கூடாது எனவும் மக்கள் தெரிவித்தனர்.
இந்த மாற்றம் மத்துகமவில் ஆரம்பிக்கப் பட்டதாகவும் ஏனைய மாகாணங்களிலும் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சுரங்கப்பாதை 3 வயது சிறுவனால் பொதுமக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.
இதற்காக செலவிடப்பட்ட தொகை 40 முதல் 50 மில்லியன் எனக் கூறப்படுகிறது.
Post a Comment