ஜனாதிபதி செயலகம் முன் திரண்டுள்ள, மக்களை விரட்டியடிக்கத் திட்டமா..??
அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எட்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கோரி அரசாங்கத்திற்கு எதிராக நாடு பூராகவும் கடந்த வாரம் தொடக்கம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், ஏப்ரல் 18 ஆம் திகதிக்கு பின்னர் காலி முகத்திடலில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தற்போது முகாமிட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவாயிலுக்கு முன்பாக இரவு பகலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும், ஏப்ரல் 18 ஆம் திகதிக்குப் பிறகு அவர்களை அந்தப் பகுதியில் இருந்து அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment