பொலிஸாருக்கு கேக் வழங்கி அமைதியாகவே ஆர்ப்பாட்டம் செய்தோம் - எனினும் எங்கள் வயிறுகளை நோக்கி பொலிஸார் சுட்டார்கள்
ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் போது வன்முறையை தூண்டிவிட்டது பொலிஸார் என சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
வீதிகள் மறைக்கப்பட்ட போதிலும் ஆரம்பம் முதலே அமைதியான போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் காரணமின்றி பொலிஸார் கண்ணீர் பிரயோகம் மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் ஒரு துளி இரத்தம் சிந்தியிருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது என அவர் கூறியுள்ளார்.
பகல் உணவு சமைத்து அமைதியாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டோம். அங்கிருந்த பொலிஸாருக்கும் கேக் வழங்கியிருந்தோம். எனினும் கண்ணீர் பிரயோகம் மேற்கொண்டமையினால் இந்த நிலைமை ஏற்பட்டது.
பொலிஸார் பொறுப்பு கூற வேண்டும். மக்களின் வயிற்றை நோக்கியே துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டிருந்தார்கள்.
இந்த சம்பவத்திற்கு பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸார் பொறுப்பு கூற வேண்டும். பொலிஸாரின் துப்பாக்கி குறி வைத்தமை தொடர்பில் சந்தேகமாகவே உள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சில நேர்மையற்ற பொலிஸ்காரர்களை நம்பமுடியாது. எனது வீட்டில் சோடாவை குடித்துவிட்டு எனது முதுகில் குத்தியவன்தான் கல்முனை பொலிசில் வேலை செய்த செல்வராஜா என்பவர். இதற்கு உடந்தையாக என் மீது போலிக்குற்றச்சாட்டு சுமத்திய வன் தான் சாய்ந்தமருதுப்பொலிஸ்காரன் CI
ReplyDelete