Header Ads



அரசாங்கத்தை முதலில் வீட்டுக்கு அனுப்புமாறே மக்கள் கோருகின்றனர், அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்


 காலி முகத்திடல் மாத்திமின்றி நாட்டின் எந்த இடத்திலும் இந்த அடாவடித்தனமான அரசாங்கத்தை முதலில் வீட்டுக்கு அனுப்புமாறே மக்கள் கோருகின்றனர். அதற்காக ஐக்கிய மக்கள் சக்தி அர்ப்பணிப்புடன் செயற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மக்களின் குரல் மற்றும் மக்களின் கோரிக்கைகளுக்கு அப்பால் தாம் எதனையும் செய்யபோவதில்லை எனவும்,தற்போதைய ஜனாதிபதியையோ அல்லது ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த யாருடனும் இணைந்து ஆட்சியமைக்குமாறு மக்கள் கோரவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்களால் பாதிக்கப்பட்டோர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று (25) நடைபெற்ற இம் மாநாட்டில், மொட்டுடன் ஆட்சி அமைத்து கொள்ளையர்களை பிடிக்க முடியாது எனவும் அவர்களுடன் இணைந்து ஆட்சியமைக்குமாறு மக்கள் கோரவில்லை எனவும் அவர் தெரிவித்தார். 

அன்று நாட்டை ஒப்படைக்கும் போது, 7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கையிருப்பு இருந்ததாகவும், இன்று அரசாங்கம் உலகம் பூராகவும் பிச்சை எடுத்துச் செல்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.