Header Ads



பிரதமர் பதவியை எனக்குத் தந்தால், பிரச்சினைகளுக்கு தீர்வை கண்டபின் மீண்டும் அந்த பதவியை திருப்பித்தரமுடியும்


பிரதமர் பதவியை தமக்கு தருமாறு ஆளும் கட்சியின் உறுப்பினர் உத்திக பிரேமரட்ன இன்று -22- நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், கடந்த மூன்று நாட்களுக்குள் சஹ்ரான் ஹாசிமை மேம்படுத்தும் உரைகளே இடம்பெற்றன

எனினும் வரிசையில் நிற்கும் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் காணப்படவில்லை. பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் குற்றவாளிகளுக்கு தண்டனையும் வழங்கியாகி விட்டது. 

எனினும் இலங்கையில் என்ன நடக்கிறது. பிரச்சினைகளுக்கு தீர்வுகள் இல்லை.

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் மூத்த அரசியல்வாதிகள் ஏன் இன்னும் பிரச்சினைகளுக்கு தீர்வுக்காணவில்லை.

எனவே பிரதமர் உட்பட்ட பதவியை தமக்கு தந்தால், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை கண்ட பின்னர் மீண்டும் அந்த பதவியை திருப்பித்தரமுடியும் என்றும் உத்திக பிரேமரட்ன குறிப்பிட்டார்

பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண ஏன் அரசியல்வாதிகள் முன்வரவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், அரசியல்வாதிகள் தமது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்து கலந்துரையாடல்களை நடத்தி பிரச்சினைக்கு தீ்ர்வுகாணவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதேவேளை பிரச்சினைகள் தீவிரமாகியுள்ள நிலையில் நாடாளுமன்றம் நாளை முதல் ஒத்திவைக்கப்படவுள்ளது. மக்களின் பிரச்சினைகளுக்காக செயற்படவேண்டிய நேரத்தில் நாடாமன்றம் மூடப்படுவது எந்தளவு நியாயம் என்றும் உத்திக பிரேமரட்ன கேள்வி எழுப்பினார்.

1 comment:

  1. பொறுத்தமானவர் போல் தெரிகிறது. அந்த சனாதிபதி பதவியை இவருக்கு ஒப்படையுங்கள் இவர் நாட்டை சிங்கப்பூராக மாற்றி அவர் அலிசப்ரி கூறிய 2வது லீகுவான் யூ போல் தோன்றுகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.