அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த, கலந்துரையாடல்கள் ஆரம்பம் - சுதந்திரக் கட்சி
தற்போதைய நிலைமைக்கு மத்தியில், எடுக்கவேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்தக் கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றதென சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான, முன்னாள் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேர தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், ஐக்கிய மக்கள் சக்தியினால், முன்வைக்கப்படவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து இதுவரையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, பிவித்துருஹெல உருமய மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட அரசாங்கத்தை பிரிதித்துவப்படுத்தும் கட்சிகளின் 41 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக கடந்த 5ஆம் திகதி அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment