ஜனாதிபதி உரையாற்றினால் அது கலவரமாக அமைந்து விடும் - பிரதமரை உரையாற்றுமாறு ஆளும்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விசேட உரையொன்றை இன்று அல்லது நாளை ஆற்றுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் நெருக்கடி நிலை குறித்து மக்களிடம் உரையாற்றுமாறு, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் நேற்று (10) பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஜனாதிபதி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினால், அது கலவரமாக அமைந்து விடும் என்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இன்றைய நிலையில், மக்களிடம் உரையாற்றக் கூடிய தலைவர் பிரதமரே என்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மெதமுலானைக் குடும்பத்துக்கு உரையாற்றலா். இ்நத நாட்டின் பொதுமக்கள் இவருடைய உரையைக் கேட்கத் தயாராக இல்லை.
ReplyDelete