Header Ads



வீரவன்சவிற்கு பிரதமர் பதவியா..? எண்ணெய்ச் சட்டிக்குள் இருந்து துள்ளி, நெருப்புக்குள் விழுந்த நிலைமை வரக்கூடாது


இன்று ராஜபக்ச ஆட்சியில் இருந்து அதிருப்தியாளர்கள் பலர் வெளியேறியிருக்கின்றார்கள். இந்த அதிருப்தியாளர்கள் அனைவரும் சேர்ந்து விமல் வீரவன்சவிற்கு பிரதமர் பதவியைக் கொடுப்பதற்குத் தீர்மானித்திருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 45ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“இந்த அரசுக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கின்றது. நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்று ஆட்சி மாற்றமொன்று எற்படுமாக இருந்தால் இந்த நாட்டை ஆளப்போவது யார் என்பதை சிந்திக்க வேண்டும்.

நிறைவேற்று அரச தலைவர் முறைமை இல்லாமலாக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு முழு அதிகாரமும் வந்தால் அந்த அதிகரம் முழுவதும் பிரதமருக்கு வரும்.

தற்போதைய நிலையிலே ராஜபக்சர்களுடன் இருந்து, அதிருப்தியில் வெளியேறிய உறுப்பினர்களில் ஒருவர் பிரதமராக வந்தால் நிலை எவ்வாறு இருக்கும்.

தற்போது அவ்வாறான ஒரு கதை பரவுகின்றது. விமல் வீரவன்ச எப்படிப்பட்டவர் என்பதை கடந்த கால அனுபவங்கள் நமக்குக் கூறும்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் மிக மோசமாக இனத்துவேசம் பேசுபவர்கள். அவர்களிடம் ஆட்சி சென்றால் எண்ணெய்ச் சட்டிக்குள் இருந்து துள்ளி நெருப்புக்குள் விழுந்த நிலைமையாக எமது நிலை வரக்கூடாது” என்றார்.

No comments

Powered by Blogger.