Header Ads



ஆர்ப்பாட்டத்தில் அடிப்படைவாதக்குழுவைக் கண்டீர்களா..?


மிரிஹானவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவேளை கைதுசெய்யப்பட்டவர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை அரசாங்கம் தவிர்க்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபைமன்னிப்புச்சபை தனது டுவிட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளது  

சட்டத்தரணிகளால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக்களின்படி மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் 50 இற்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதுடன் அவர்கள்மீது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது. மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வை வழங்குமாறுகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதை ஆட்சியாளர்கள் தவிர்க்கவேண்டும்.என சர்வதேச மன்னிப்புச்சபைமன்னிப்புச்சபை தனது டுவிட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளது  

'பயங்கரவாத' செயல்களுடன் தொடர்புடையவர்களெனச் சந்தேகிக்கப்படுவோரைத் தடுத்துவைப்பதற்கும் அவர்களுக்கான அடிப்படைப் பாதுகாப்பை மறுப்பதற்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் இடமளிக்கின்றது. அத்தோடு அச்சட்டத்தின்படி வாக்குமூலமும் ஓர் ஆதாரமாக ஏற்கப்படுகின்றது. எனவே அச்சட்டத்தின் பிரயோகம் உடனடியாக இடைநிறுத்தப்படவேண்டும் ..என சர்வதேச மன்னிப்புச்சபைமன்னிப்புச்சபை தனது டுவிட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளது  

அடிப்படைவாதிகளாலேயே மிரிஹான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ள நிலையில் அதனை மேற்கோள்காட்டி சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆய்வாளரும் மனித உரிமைகள் செயற்பட்டாளருமான த்யாகி ருவன்பத்திரண அவரது டுவிட்டர் பக்கத்தல் பதிவொன்றைச் செய்திருக்கின்றார்.

நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட எவரேனும் அத்தகைய அடிப்படைவாதக்குழுவைக் கண்டீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர்இ 'தமது அத்தியாவசியத்தேவைகளுக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் 'அடிப்படைவாதிகள்' என்று அழைக்கப்படுகின்றனர். சிலவேளைகளில் இந்த நிலைப்பாடு உங்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டிருக்காவிட்டால் பல தசாப்தங்களாக சிறுபான்மையின மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுவந்த இந்த கருத்தியலை நீங்கள் நம்பியிருப்பீர்கள்' என்று என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

No comments

Powered by Blogger.