பிரான்ஸில் இலங்கையர்களிடம் இருந்து பெருந்தொகை யூரோக்கள் மீட்பு
மோன்பார்(t)டிஏர் (Montbartier) பகுதியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இருவரை தடுத்து நிறுத்திய பொலிஸார் அவர்களின் வாகனத்தை சோதனையிட்டுள்ளனர்.
வாகனத்தில் சட்டவிரோதமான சிகரெட் மற்றும் மதுபான சரக்குகளை ஏற்றிச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக பொலிஸார் குறித்த இரண்டு இலங்கையர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த இரண்டு போரிடம் மேற்கொள்ளப்பட்ட 24 மணித்தியால விசாரணைகளின் பின்னர், சந்தேக நபர்களின் பைகளிலும் வாகனத்திலும் இருந்து 66,000 யூரோ பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மோன்தோபோன் (Montauban Nord) இல் உள்ள A20 சுங்கச்சாவடியில், நெதர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட வாகனம் ஒன்று இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தில் இருவரை முதலில் சோதனையிட்ட போது 4000 யூரோக்கள் கண்டுபிடிக்க்பபட்டுள்ளது. மேலும் சிலர் அதிகாரிகளின் உதவியுடன் சோதனையிட்ட போது அவர்களிடம் மேலும் 62000 யூரோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த பணம் ஆடை சலவை செய்ய பயன்படுத்தும் சலவை தூளில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் அந்த பணத்திற்கான ஆதாரத்தை குறித்த இலங்கையர்களால் சமர்பிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களால் சரியான தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாமல் போயுள்ளது.
தாங்கள் ஒன்லைன் ஊடாக மேற்கொண்ட தொழிலேயே இந்த பணம் கிடைத்ததாக அவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டதரணி நீதிமன்றத்தில் கூற முயற்சித்த போதிலும் அதனை நிரூபிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இறுதியில் அவர்கள் பணம் தூய்மையாக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ள நிலையில் அவர்களை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
Post a Comment