Header Ads



உலகின் மிகவும் பலவீனமான, நாணயமாக இலங்கை ரூபா


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை கட்டுப்படுத்த போராடி வரும் நிலையில், இலங்கையின் ரூபாயின் மதிப்பு, உலகின் மிகவும் பலவீனமான நாணயமாக இலங்கை ரூபா மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Financial Times of India வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் இலங்கை ரூபாய் அமெரிக்க டொலருக்கு நிகராக 300 ரூபா வரையில் அதிகரித்துள்ளது. ரஷ்யாவின் ரூபிள் கூட பின்தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடனை செலுத்துதல், பரவலான எதிர்ப்புகள் மற்றும் பொருளாதார அவசரநிலை ஆகியவற்றுடன் அதன் அரசாங்கம் போராடுவதால், இலங்கை அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

கடுமையான உணவு தட்டுப்பாடு, மின் தட்டுப்பாடு மற்றும் பணவீக்கம் காரணமாக நாடு தழுவிய போராட்டங்களைத் தொடர்ந்து நாட்டின் முழு அமைச்சரவையும் வார இறுதியில் இராஜினாமா செய்திருந்தது.

இவ்வாறான நிலையில், உலகின் மிகவும் பலவீனமான நாணயமாக இலங்கை ரூபா மாறியுள்ளதாக Financial Times of India செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைக் கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்க டொலரொன்றின் விற்பனைப் பெறுமதி 308 ரூபா 49 சதமாக அதிகரித்துள்ளது. அத்துடன் டொலரின் கொள்முதல் பெறுமதியானது 298 ரூபா 10 சதமாக பதிவாகியுள்ளது. யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபா 70 சதமாகவும், விற்பனை பெறுமதி 339 ரூபா 07 சதமாகவும் காணப்படுகிறது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 390 ரூபா 15 சதம், விற்பனை பெறுமதி 404 ரூபா 71 சதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.