Header Ads



டீசல் தட்டுப்பாட்டுக்கு மத்தியில், டீசல் விநியோகத்தில் மோசடி


நாட்டில் நிலவும் டீசல் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் 79,200 லீற்றர் டீசல் கொண்ட மொத்தம் 12 பவுசர்கள் அம்பத்தளை நகரில் எரிபொருள் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

எனினும் இவை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படவில்லை என தாங்கி ஊர்திகள் (பவுசர்கள்) சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் 36,000 லீற்றர் கொண்ட ஆறு தாங்கி ஊர்திகள் (பவுசர்கள் )இன்று எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட உள்ளதாக அந்த சங்கம்; தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன நுகர்வோர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது

அம்பத்தளை நகரில் புதிதாக திறக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் ஜனாதிபதி செயலகத்தின் பிரத்தியேக செயலாளர் ஒருவரின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமானது என்று விடயம் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் குறித்த பிரத்தியேக செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய அதிக எரிபொருள் அம்பத்தளை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தாங்கி ஊர்திகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்ட டீசல், நுகர்வோர் எவருக்கும் விநியோகிக்கப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக கொழும்பு டூப்ளிகேசன் வீதியில் உள்ள பல ஹோட்டல்களுக்கு ஒரு லீற்றர் டீசல் 300 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் ஊர்திகள் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.