எரிவாயு கிடைக்காமையால் ஏமாற்றத்துடன் வீதி மறியல் போராட்டம் செய்த மக்கள்
- ஹஸ்பர் -
திருகோணமலை தபால் நிலைய நாற்சந்தி வீதியில் எரி வாயு விநியோகம் நடைபெறவுள்ளதை அறிந்த மக்கள் அங்கு சென்று இன்று (08) மாலையில் இருந்து பல மணி நேரம் காத்திருந்த போதும் எரிவாயு விநியோகம் இடம் பெறவில்லை. குறித்த பகுதியில் சுமார் மூன்று மணித்தியாலயத்துக்கும் மேலாக எரிவாயு வாகனம் வரும் என காத்திருந்த போதும் ஏமாற்றத்துடன் எரிவாயு விநியோகம் செய்ய வாகனம் வருகை தராததையிட்டு வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்து காணப்படுகிறது. பொலிஸார் உரிய பகுதியில் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மக்களை இவ்வாறாக பல மணி நேரம் ஏமாற்றுவது அவர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியதனால் சாலை மறியல் போராட்டம் இடம் பெற்றுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் ஒரு பாதக விளைவே எரிவாயு தட்டுப்பாடும் காணப்படுகிறது. குறித்த பகுதியில் உள்ள மக்கள் எரிவாயு இன்றி ஏமாற்றமடைந்துள்ளதாகவும் இதனால் பாரிய சிக்கல்களை எதிர் கொள்வதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
Post a Comment