போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு பணம் வழங்கி, அரசாங்கம் செய்து வரும் சிறு போராட்டங்கள் வெற்றியளிக்காது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்த மூன்று ஆண்டுகளிலும் மக்களினால் சிங்கள, தமிழ் புத்தாண்டை கொண்டாட முடியவில்லை என ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
ஊழல் மோசடி மிக்க ஆட்சியாளர்களை விரட்டியடித்து புதிய குழுவொன்றிடம் ஆட்சியை ஒப்படைக்கும் போதே இந்த ஆண்டு புத்தாண்டு மலரும் என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்சியாளர்களை விரட்டியடிக்கும் நோக்கில் இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முன்னெடுத்து வரும் போராட்டம் வெற்றியளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியதன் பின்னரான மூன்று ஆண்டுகளிலும் மக்களினால் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டா முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கோவிட் பெருந்தொற்று, இந்த ஆண்டு அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற காரணிகளினால் மக்களினால் புத்தாண்டை கொண்டாட முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு பணம் வழங்கி அரசாங்கம் வேண்டுமென செய்து வரும் சிறு போராட்டங்கள் வெற்றியளிக்கும் என எதிர்பார்க்க முடியாது என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
காலி முகத் திடலில் இளைஞர், யுவதிகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை சிறு குழுக்களை கொண்டு தடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Twin
Post a Comment