வாழ்கைச் செலவை குறை, களவாடிய பணத்தை கொடுத்து விட்டு சிறைக்குப் போ (வீடியோ)
Ismathul Rahuman
நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை, வைத்தியர்கள் உட்பட சகல தரத்தின் ஊழியர்கள் நேற்று பகல் வைத்திய சாலைக்கு முன்பாக இந்த நாடு நாட்டு மக்களுக்கை உரியது அல்லாமல் அரசியல் கட்சிகளுக்கல்ல,அதனில் மக்கள் மேலான்மைக்கு மதிப்பளி என்ற தொனிப்பொருளில் அரசுக்கு எதிராக சுலோகங்களை கோஷித்த வன்னம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக தெல்வத்த சந்தியில் மாநகர சபைக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள கோ ஹோம் கோட்டா கிளைக்கு வந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு உயிரைக் காக்க பணம் தா, இலவச சுகாதாரம் இல்லாவிட்டால் மக்கள் மக்கள் இல்லாவிட்டால் நீங்கள் இல்லை, நோயாளிகள் ஆபத்தில் இலவச சுகாதாரத்தை பாதுகாப்போம், வாழ்கைச் செலவை குறை, களவாடிய பணத்தை கொடுத்துவிட்டு சிறைக்குப் போ,சுகாதாரம் அடிப்படை மனித உரிமை போன்ற சுலோகங்களை எழுப்பினர்.
Post a Comment