Header Ads



சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முயற்சிக்கும்


ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அமைச்சர், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது மக்களின் ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு உரிமை எனவும், இந்த உரிமையை அரசாங்கம் தடுக்காது எனவும் தெரிவித்தார்.

எவரேனும் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது மற்றும் ஒழுங்கீனமான நடத்தைகளில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் மற்றும் கடமைகளில் ஈடுபடும் ஊடகவியலாளர்களை வேறுபடுத்துமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அத்தகைய நபர்கள் சட்ட அமுலாக்க அதிகாரிகளால் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என்றும் கூறினார். 

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முயற்சிக்கும் என்று குறிப்பிட்டார்.

3 comments:

  1. Sir you failed. Again you are going to fail. People understood the truth. People's force will win.

    ReplyDelete
  2. இந்த மனுசன் செய்த கொடுமைகளின் சாபம்தான் இன்றைய நாட்டின் நிலைமை.

    ReplyDelete
  3. You may try but it will not succeed. Why do you publish this idiot's message. I was really annoyed.

    ReplyDelete

Powered by Blogger.