Header Ads



அரசாங்கத்திற்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை, சகல தரப்பினரிடமும் கலந்துரையாடல்கள்


ஐக்கிய மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது.

அரசாங்கத்திற்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை கொண்டு வரப்படவுள்ளமை மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கை தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டிருந்ததாக எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

அவநம்பிக்கை பிரேரணையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு, சகல தரப்பினரிடமும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கட்சியின் தலைவர் சஜித்பிரேமதாச கலந்துரையாடியுள்ளார்.

எனவே அனைத்து தரப்பினரின், ஒத்துழைப்புடன் அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்படும் என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.