Header Ads



வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் உதவியை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு


அந்நிய செலாவணி கையிருப்பு குறைவதால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை போக்க வெளிநாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

இந்த அந்நிய செலாவணி நன்கொடை மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று மத்திய வங்கி தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அந்நியச் செலாவணி பெறுகைகள் மற்றும் அவற்றின் பயன்பாடு என்பவற்றை  வெளிப்படைத் தன்மையை பேணுவதற்காக மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றையும் மத்திய வங்கியின் ஆளுநர் நியமித்துள்ளார்.

நன்கொடைகள் தொடர்பான தகவல்களை fdacc@cbsl.lk என்ற மின்னஞ்சல் மூலம் அல்லது 076 83 15 782 என்ற இலக்கத்திற்கு WhatsApp க்கு அனுப்புவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.


1 comment:

  1. மக்கள் சொத்தை கொள்ளயடித்து நாட்டுமக்களை கடன்காரர்களாக ஆக்கிய இராஜபக்ஷ்சர்கள் நாட்டு நிர்வாகத்தில் இருந்து தூரமாகினால் வெளிநாட்டில் உள்ள மக்கள் நாட்டை காப்பாற்ற அவர்களால் இயன்ற முயற்சிகளை செய்வார்கள்!

    சுமார் 3 வருடங்களுக்குல் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேர்ப்பதற்கும் வாய்ப்புண்டு!!!

    ReplyDelete

Powered by Blogger.