காலிமுகத் திடலில் கோபுரத்தை தாமே நிறுவியதாக டயலொக் அறிவிப்பு
வலையமைப்பு நெரிசலுக்கு தீர்வாகவே காலி முகத்திடலில் 20 அடி என்டனா கோபுரக் கட்டமைப்பை நிறுவியுள்ளதாக டயலொக் எக்சியாட்டா பிஎல்சி தெரிவித்துள்ளது.
டயலொக் அதன் வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் காலி முகத்திடலில், 6-மீட்டர் (20அடி) துருவ என்டெனா கோபுர கட்டமைப்பை நிறுவியமை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஊகங்களுக்கு மத்தியில், டயலொக் எக்சியாட்டா பிஎல்சி, உள்ளூர் தொடர்பாடல் நிறுவனம் தமது உறுதிப்படுத்தலை வெளியிட்டுள்ளது.
தமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் இருக்கும் பகுதிகளில் நெரிசலைத் தணிக்கச் செயல்படுத்தப்படும் வலையமைப்புத் தீர்வுகளில் இந்த கோபுர அமைப்பும் ஒன்றாகும் என்று நிறுவனம் குறிப்பிட்;டுள்ளது
வாடிக்கையாளர் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில், திறன் அதிகரிப்பு மற்றும் சேவையின் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகள் நிறுவனத்தின் நாளாந்த செயல்பாடுகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படுகிறது என்றும் டயலொக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் அனுமதியை பெற்ற பின்னர் அதிகரிக்கப்பட்ட திறன் செயற்படும் என்றும் டயலொக் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment