எனக்கெதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்கவில்லை - பதவிக் காலம்வரை ஜனாதிபதி பதவியில் நீடிப்பேன்
எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்கவில்லை. எதிரணியினரே மக்கள் பின்னால் நின்று போராட்டங்களை நடத்துகின்றனர் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், போராட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் எனது ஜனாதிபதி பதவிக்குரிய காலம் வரை நான் பதவியில் தொடர்ந்து நீடிப்பேன். அன்று எனக்கு எதிராகக் களமிறக்கப்பட்ட இருவரும் (சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸாநாயக்க) இன்று எனக்கு எதிரான போராட்டங்களை நடத்துகின்றனர். அவர்களின் கட்சிகளின் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களுமே எனக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடுகின்றனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மடையன், பைத்தியகாரன், கொலைகாரன்,நாட்டின் சொத்துக்களை சூறையாடிய கள்ளப் பேர்வழி என பொதுமக்கள் யாரைக்குற்றம் கூறினார்கள் என்பது இப்போது கேள்விக்குறியாக இருக்கின்றது.
ReplyDelete