அரசாங்கத்துக்கு பௌத்த உயர் பீடங்கள் எச்சரிக்கை
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மகா சங்கத்தினர் ஒன்றிணைந்து சங்க மாநாட்டை பிரகடனப்படுத்துவோம் என, மூன்று பௌத்த உயர் பீடங்களின் மகாநாயக்கர்கள் அரசாங்கத்துக்கு விசேட கடிதம் ஒன்று அனுப்பியுள்ளனர்.
மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானதாரன தேரர், ஸ்ரீலங்கா அமரபுர மகா நிகாயாவின் தொடம்பஹல ஸ்ரீ சந்திரசிறி தேரர் ஆகியோரின் கையொப்பத்துடனேயே குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கும் தற்போதைய நெருக்கடிகளுக்கும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் பொறுப்புகூறவேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.
புதிய அமைச்சரவை நியமனம் பிரச்சினைக்கு தீர்வாகாது எனவும், 20ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி 19ஆவது திருத்தச் சட்டத்தின் சாதகமான அம்சங்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அது என்ன சங்கநாடு? மண்ணாங்கட்டி நாடு
ReplyDelete