Header Ads



சஜித் பின்னடிப்பது ஏன்...? சம்பிக்க, பொன்சேகா விமர்சனம்


 - Siva Ramasamy -

சஜித்…

* இடைக்கால அரசுக்கு ஒரு போதும் ஆதரவுமில்லை..

* நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வும் வேண்டும்..

* இடைக்கால அரசொன்றை அமைத்து பிரச்சினைகளை தீருங்கள் என்றால் அதுவும் இல்லை...

இவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் நிலைப்பாடு...

அப்படி என்றால் இப்போது தேர்தல் ஒன்றுக்கு செல்வதா தீர்வு? இதனை தாங்குமா நாடு ?

இதுதான் முடிவென்றால்,ஆளுங்கட்சி மட்டுமல்ல எதிர்க்கட்சியும் சுயாதீன எம்.பிக்களை உருவாக்கப்போகிறது...

இப்போதும் - சம்பிக்க, சரத் பொன்சேகா உட்பட்டோர் சஜித்தின் நிலைப்பாட்டை விமர்சிப்பதாக தகவல்...

சரியோ பிழையோ இவ்வளவு நெருக்கடியிலும் நிதியமைச்சை எடுத்து போராடிக்கொண்டிருக்கிறாரே அலி சப்ரி..

அப்படி, பொருளாதார வல்லுநர் ஹர்ஷ மற்றும் எரான் போன்றோர்களை உள்ளடக்கி இடைக்கால அரசை ஏற்படுத்த சஜித் பின்னடிப்பது ஏன் ? நாட்டை எல்லோரும் சேர்ந்து கட்டியெழுப்ப வேண்டிய தருணம் இல்லையா இது ? இந்த நெருக்கடியில் பின்னடிக்கும் நீங்கள் எப்படி ஒருகாலத்தில் நாட்டை நிர்வகிப்பீர்கள் ?

அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் செயற்பட்டால் எதிர்க்கட்சியினரையும் நம்ப மறுத்துவிடுவார்கள் மக்கள்…

No comments

Powered by Blogger.