Header Ads



மக்களுக்கு நிவாரணம் வழங்க, ஒரு மில்லியன் டொலர்களை திரட்ட ஆரம்பித்துள்ள யொஹானி


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இளம் பாடகியான யொஹானி டி சில்வா ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட ஆரம்பித்துள்ளார்.

தற்போது மும்பையில் உள்ள அவர், “Go Fund Me”க்கு நன்கொடை அளிக்குமாறு இந்திய மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியன் வியன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பல தொழிலதிபர்கள் இந்த திட்டத்திற்கு நிதிக்கு பங்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் யொஹானி கூறினார்.  

பாடகி யொஹானி மெனிக்கே மகே ஹிதே என்ற சிங்கள பாடல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர். இதன் மூலம் உலகளாவிய ரீதியில் பல மில்லியன் ரசிகர்களை தன்பால் ஈர்த்துள்ளார்.

இந்த பாடல் மூலம் இலங்கைக்கு பெருமை கிடைத்தாக அரசாங்கம் பாராட்டு தெரிவித்ததுடன், அதனை கௌரவிக்கும் வகையில் காணியுடன் வீடு ஒன்றையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.