Header Ads



நான் மிகவும் அச்சமடைந்துள்ளேன் - அர்ஜூன


இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தருணத்தில் உதவிசெய்தமைக்காக இந்திய பிரதமருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அர்ஜூனரணதுங்க.

இந்திய ஊடகமொன்றிறகு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உதவி வழங்கும் விடயத்தில் பிரதமர் மோடி ஆரம்பத்திலிருந்தே தாராளமனப்பான்மை உடையவராக காணப்பட்டார் யாழ்ப்பாண விமானநிலையத்தி;ற்கான உதவிகளை வழங்கினார்  என  அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மூத்த சகோதரனை போல செயற்படுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கைக்கு பணம் வழங்குவதை விட அவர்கள் நிலைமையை உன்னிப்பாக அவதானிக்கின்றனர் என்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.

அவர்கள் பெட்ரோல் மருந்துகள் போன்ற எங்களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்துகின்றனர் - இந்த பொருட்களிற்கு அடுத்த சில மாதங்களில் பற்றாக்குறை ஏற்படும் என நான் நம்புகின்றேன் இந்தியா பெரிய விதத்தில் எங்களிற்கு உதவி வழங்குகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

நான் இரத்தக்களறியை விரும்பவில்லை - இதுவே எனது பெரும் கவலை நான் மிகவும் அச்சமடைந்துள்ளேன் மக்கள் இன்னுமொரு போரில் ஈடுபடுவதை நான் விரும்பவில்லை,நான் அவ்வாறான யுத்தமொன்றினால் பல வருடங்கள் துன்பத்தை அனுபவித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நோய் தமிழர்கள் முஸ்லீம்களால் உருவாக்கப்பட்டது என காண்பிப்பதற்கு அரசாங்கத்தின் சில அரசியல்வாதிகள் முயல்கின்றனர் இதன் மூலம் அவர்கள் நாட்டை பிளவுபடுத்த முயல்கின்றனர் என அர்ஜூன தெரிவித்துள்ளார்.

நாட்டில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் பொதுமக்களின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியுள்ளதுடன் அரசாங்கம் கொவிட் பெருந்தொற்றினை உரிய விதத்தில் கையாளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் பெட்ரோல் உணவு அரிசி போன்றவற்றை கேட்டே வீதிக்கு வந்துள்ளனர்,இடம்பெறும்; வன்முறைகளை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்,அது இடம்பெறக்கூடாது ஆனால் நாடு கடந்த இரண்டு வருடங்களில் பாரிய குழப்பத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கொவிட்தான் காரணம் என தெரிவிக்கலாம் ஆனால் ஏனைய நாடுகளும் இதனை அனுபவித்துள்ளன,இவர்கள் உரிய விதத்தில் நிலவரத்தை கையாளவில்லை எந்த பிரச்சினையையும் தங்களால் வெல்ல முடியும் என்ற அளவுக்கதிகமான நம்பிக்கையில் இவர்கள் காணப்பட்டார்கள் எனவும் அர்ஜூன தெரிவித்துள்ளார்.

அவர்கள் தங்களிற்கு எதிரான நீதிமன்ற வழக்குகளில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டார்கள் அதன்காரணமாகவே மக்கள் வீதிக்கு வந்தார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.