அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை மத்திய வங்கிக்கு ஆளுநர்
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதை அடுத்து, அப்பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்தை தொடர்ந்து, புதிய ஆளுநராக மத்திய வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கும் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிடம் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இம்மாதம் 7ஆம் திகதி இலங்கை வரவுள்ள அவர், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை பொறுப்பேற்பது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக உள்ளகத் தகவல்களில் இருந்து அறியமுடிகிறது.
எங்கிருந்து ஆளை பிடித்தாலும் அடுத்த 10 வருடங்களுக்கு இலங்கையின் பொருளாதாரம் விழும்
ReplyDelete