Header Ads



இடைக்கால அரசாங்கம் தொடர்பில் சிலர் பரப்பிய நாடகத்தின் உண்மை இன்று அம்பலமாகியுள்ளது - சஜித்


 இடைக்கால அரசாங்கம் தொடர்பில் சிலர் பரப்பிய நாடகத்தின் உண்மை இன்று அம்பலமாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

அரசாங்கம் அச்சாறாகிட்டதாகவும் அச்சாறாகியுள்ள ஆட்சியில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கோ அல்லது பங்காளிகளாகுவதற்கோ ஐக்கிய மக்கள் சக்தி தயாரில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த நாடகம் குறித்து ஆரம்பத்திலேயே தான் அறிந்திருந்ததாகவும் தெரிவித்தார். 

எதிர்க்கட்சித் தலைமைப் பதவியோ அல்லது அதற்கு அப்பாலான பெரிய பதவிகளோ தனக்கு ஆபரணங்கள் இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அந்தப் பதவிகளுக்கு அடிபணிந்து மக்கள் போராட்டத்தை காட்டிக்கொடுக்க போவதில்லை எனவும் தெரிவித்தார். மக்களின் போராட்டங்கள் மற்றும் அவர்களின் கோரிக்கைகளை சலுகைகளுக்காக காட்டிக்கொடுக்கும் பழக்கம் ஐக்கிய மக்கள் சக்திக்கு இல்லை எனக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டமானது, இந்நாட்டு மக்களுக்கு வெற்றியை பெற்றுக்கொடுப்பதாகவும் எனவும் தெரிவித்தார். 

இன்று சிலர் நிதி சலுகைகளை வழங்கி, அரசாங்கத்தை அமைக்க முயற்சித்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியிலுள்ள எந்தவொரு உறுப்பினரும் இவ்வாறான சலுகைகளை நம்பி ஏமாற மாட்டார்கள் எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திரத்திற்கான போராட்டத்தின் 'ஐக்கிய சக்தி பாத யாத்திரை' இன்று (29) நான்காவது நாளாக தங்கோவிட்டவில் ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டு இலட்சக்கணக்கான மக்கள் இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.