Header Ads



இந்த அரசாங்கம் சீர்குலைந்து கிடக்கிறது


 நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்கள்.

மலையகம் இந்நாட்டின் சுதந்திரப் போராட்டங்களின் மையமாக விளங்குவது கண்டி என்பது யாவரும் அறிந்ததே. எமது நாடு 1948 இல் சுதந்திரம் பெற்ற போதிலும் 100 வருடங்களுக்கு முன்னர் கண்டிய எழுச்சியின் ஊடாக சுதந்திரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின. 1848 எழுச்சிக்கு முன்பு 1818 இல் ஒரு எழுச்சி ஏற்பட்டது அதிலும் ஆயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டன. எமது நாட்டைப் பாதுகாக்க மலையகத்தின் தலைநகரான கண்டியில் நவீன சுதந்திரப் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். இன்று நம் நாட்டில் பொருளாதார சுதந்திரம் இல்லை, அரசியல் சுதந்திரம் இல்லை, ஒரு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் நாடு உள்ளது. இப்போது பாருங்கள் நம் நாட்டிற்கு என்ன நடந்திருக்கிறது என்பதை,இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்த உள்ள நிலை எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சிறிது நேரத்திலேயே நமது கையிருப்புக்கள் வீழ்ச்சியடைந்தன. நாங்கள் நாட்டை ஒப்படைத்த போது ஏழாயிரத்து தொளாயிரத்து ஏழு நூறு மில்லியன் டொலர்கள் கையிருப்பில் இருந்தன.இன்று பூஜ்ஜியமாக குறைந்துள்ளது.

மக்கள் வாழ்வதற்கு அத்தியாவசியமான பொருட்களான தண்ணீர், மின்சாரம், எரிவாயு, எரிபொருள் போன்றவற்றின் விலைகள் எந்தக் கட்டுப்பாடும் இன்றி உயர்ந்துள்ளன. மக்களுக்கு சுதந்திரம் இல்லை, பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன, மருத்துவமனைகளில் மருந்து இல்லை, அரசாங்கம் என்ன செய்கிறது என்று மக்கள் கேட்கின்றனர். உண்மையில் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் தான் இந்நிலை உருவானது, ஏனெனில் தற்போதைய அரசாங்கம் முதல் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 800 பில்லியன் ரூபா அரசாங்க வருமானத்தை இழந்துள்ளது. முன்னைய அரசாங்கம் பெரும் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட VAT ஐ பாதியாகக் குறைத்து அரசாங்க வருமானத்தில் 600-800 பில்லியன் ரூபாவை இழந்தது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது எங்களின் வருமானம் 1000 பில்லியனாக இருந்தது நாம் நாட்டை கையளிக்கும் போது 2000 பில்லியனை அண்மித்த வருமானம் இருந்தது. வருமானத்தைப் பெருக்கி, பணத்தை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தினோம்.சம்பளத்தை அதிகரித்தோம்.எரிபொருள் விலை குறைக்கப்பட்டது. சமுர்த்தி கொடுப்பனவு இரட்டிப்பாக்கப்பட்டது. கட்டுப்பாட்டு விலை உருவாக்கப்பட்டது.அத்தியாவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பாடசாலை மாணவர்கள் காப்பீடு செய்யப்பட்டனர். இவை தான் அடிப்படை, ஆனால் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் ஆன நிலையில் பெருமளவு வருமானத்தை இழந்தது.நிறைய பணத்தை இழந்தது.பெரும் நிறுவனங்கள் நிறைய பணத்தை இலாபமாக பெற்றன.

நல்லாட்சி அரசாங்கம் விலைக் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது.எமது அரசாங்கத்தின் காலத்தில் வாழ்க்கைச் செலவுக் குறைப்பு குழு இருந்தது. வாரந்தோறும் சந்தை விலைகள் கட்டுப்படுத்தப்பட்டது. சீனியின் விலை அதிகமாக இருந்தால் விலை தானாகக் குறையும் இடத்தில் சீனியை இறக்குமதி செய்திருப்போம். நண்பர்களே, குறுகிய காலத்தில் எமது நாடு அதலபாதாளத்தில் வீழ்ந்ததற்கு மற்றுமொரு காரணம் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் கீழ் ஜனாதிபதியின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டதாகும்.எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திற்குள் பிரதமர், பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் சட்ட சபைக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டன.தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சிறிது காலத்திலேயே இருபதாவது திருத்தத்தை கொண்டு வந்து பாராளுமன்றத்தின் அதிகாரங்களை மட்டுமன்றி நீதித்துறை, பொதுச்சேவை ஆணைக்குழு மற்றும் இன்னும் பிற அதிகாரங்கள் அனைத்தையும் நிறைவேற்று ஜனாதிபதியிடம் ஒப்படைத்தது. தற்போதுள்ள சுயாதீன ஆணைக்குழுக்கள் எதுவும் இன்று சுயாதீனமாக இல்லை.இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து விலகியவர்கள் யார்?மொட்டு அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள் சுதந்திரமானவர்கள் அல்ல.இந்த அதிகாரம் ஒருவருக்கு வழங்கப்பட்டது.அந்த நபர் தவறான தீர்மானங்களை எடுத்தார்.அமைச்சரவையில் கூட கலந்துரையாடப்படவில்லை.இவ்வாறே

அமைச்சரவை முடிவுகள் எடுக்கப்பட்டன.

உர மானியம் 24 மணி நேரத்தில் இரத்து செய்யப்பட்டது.ஒரு வருடத்திற்கு முன்பு நாங்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லுமாறு கூறியும் செல்லவில்லை. அந்த தவறான முடிவுகளால் தான் நாடு பாதாளத்தில் விழுந்தது. .இன்று சிலர் பாராளுமன்றத்தை குறை கூறுகின்றனர். ஆனால் உண்மையில் பாராளுமன்றம் இன்று அதன் மதிப்பை இழந்துள்ளது. அவர்களுக்கு அதிகாரம் இல்லை.20 ஆவது திருத்தத்தை கொண்டு வந்தனர்.உண்மையில் நல்லாட்சி அரசாங்கம் நாடாளுமன்றத்தில் துறைசார் கண்காணிப்பு குழு அமைத்தோம்.வழக்கை விசாரித்த தனிப்பட்ட சட்டத்தரணிகளைக் கொண்ட குழுவால் புதிய அரசியலமைப்பு முன்மொழிவை தயார்படுத்தி பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தனர். துறைசார் மேற்பார்வைக் குழுவின் சபாநாயகர் இடைநீக்கம் செய்யப்பட்டு நேரடியாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சியின் பிரதம கொறடா என்ற வகையில் நான் பல திருத்தங்களை முன்மொழிந்தேன், அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை,ஒரு விவாதம் கூட பாராளுமன்றத்தில் நடத்தப்படவில்லை.

ஆட்சியாளர்களின் பணத்தை மறைக்க துறைமுக நகரம் கட்டப்பட்டது.கறுப்பு பணம் இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு துறைமுக நகரம் மூலம் பல்வேறு மக்களுக்கு வழங்கப்பட்டது.போர்ட் சிட்டியில் உள்ள பணத்தை நாடாளுமன்றத்தால் ஆய்வு செய்ய முடியுமா என்று திரு ஜி.எல்.பீரிஸிடம் கேட்டேன்.இதன் மூலம் சர்வதேச நம்பிக்கை முற்றாக தகர்க்கப்பட்டுள்ளது.சர்வாதிகாரப் பாதையில் செல்வதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.முதன்முறையாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் எமக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நமது நாட்டில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டின.

சில நாடுகள் நமக்குக் கடன் தருகின்றன ஆனால் நமது ஏற்றுமதியில் ஒரு ரூபா கூட எடுக்கவில்லை.உதாரணமாக, சீனாவை குறிப்பிடலாம்.நமது ஏற்றுமதியில் 65% ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவிற்கு செல்கிறது. அவர்கள் நமது ஏற்றுமதியை வாங்குகிறார்கள்,மேலும் வாங்க தயாராக இருக்கிறார்கள்,ஆனால் இந்த நாடுகளுடன் எங்களுக்கு நல்ல உறவு இல்லை, எங்களுக்கு கடன் கொடுக்கும் நாடுகளுடன் மட்டுமே நாங்கள் கையாளுகிறோம்.பொருளாதாரத்தில் இன்று மந்த நிலையில் இருக்கிறோம்.தேசபக்தி அரசியல் ரீதியாக நாட்டை காக்க பயன்படுத்தப்பட்டது.இது வெற்றுக் கோஷம்.தேர்தலின் போது இந்தியாவிற்கு ஒரு முனையமும், இன்னொரு துண்டு சீனாவிற்கும், யுகதனவியை அமெரிக்காவிற்கும், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிற்கும் வழங்கப்பட்டுள்ளன.எந்த அறிவிப்பும் இல்லாமல் பாராளுமன்றமத்திற்கு பொறுப்புக்கூறாது இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.மேற்கொள்ளப்பட்ட சில உடன்படிக்கைகளை சபைக்கு முன்வைக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டோம்.அரசாங்கத்தால் எந்த ஒப்பந்தமும் சபையில் முன்வைக்கப்படவில்லை.

நிதியதிகாரம் பாராளுமன்றத்திற்குருயது.

ஆனால் உண்மையில் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறாதே தற்போதைய அரசாங்கம் செயற்படுகிறது.அவை அனைத்தையும் ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்டன. இதுவே கசப்பான உண்மை.சிலர் இது தெரியாமல் பாராளுமன்றத்தை குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் யாருக்கும் இது குறித்த விமர்சன விடய அறிவு தெரியாது.அதுதான் இன்று நாட்டில் நிலைமை.

இன்று இந்நாட்டில் ஒரு அரசாங்கம் இருக்கின்றதா?அத்தகைய அரசாங்கம் எப்படி அமையும்?சிலர் கோட்டாபய இருக்க வேண்டும் என்கிறார்கள், சிலர் மஹிந்த இருக்க வேண்டும் என்கிறார்கள்.அப்படியொரு அரசாங்கம் அமைக்க முடியுமா?  இப்படிப்பட்ட ஒரு அரசுக்கு எந்த சர்வதேச அமைப்பு உதவுகின்றது என்று கேட்கிறேன்.  இந்த அரசாங்கம் சீர்குலைந்து கிடக்கிறது.அதனால் பிரதமர் மற்றும் ஜனாதிபதி அவர்கள் பக்கம் நிற்பதாக கூறுவதில் பயனில்லை.பேசி கடனை அடைக்க காலம் ஒதுக்கிய பிறகுதான் சர்வதேச நாணய நிதியம் நமக்கு உதவும்.  அதற்கு நாம் எப்படி பணம் செலுத்த முடியும்?IMF உதவியுடன், இந்நாட்டில் உள்ள அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் மீண்டும் 40% அதிகரிக்கும். வரவு செலவுத்திட்டத்திற்காக 50% கடன் வாங்குகிறார்கள். ஆனால் கடன் வாங்கி, சுருட்டி, முதலீடு செய்து,அதில் இலாபம் பெற்று அந்த இலாபத்திற்கு வட்டி கட்டுகிறார்கள்.அப்படித்தான் பணம் கைமாறுகிறது.

இன்று இந்நாட்டை ஆளக்கூடிய ஆணை இந்த அரசாங்கத்திற்கு இல்லை.புதிய அரசாங்கத்தினால்தான் இந்நாட்டை அமைதிப்படுத்த முடியும்.ஏனெனில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் நாட்டை அமைதிப்படுத்த அந்த அரசாங்கத்திற்கு மக்கள் கால அவகாசம் வழங்குவார்கள்.  மேலும், புதிய அரசாங்கத்தை சர்வதேச சமூகம் கையாள ஆரம்பிக்க முடியும்.  ஏனென்றால் சர்வதேசம் இந்த அரசாங்கத்துடன் விரக்தியில் உள்ளது.

இப்போதைய அரசாங்கத்தின் தேவை ஒன்று.மக்களின் தேவை வேறு.ஆனால் அரசாங்கம் இதை எங்காவது கட்டிப்போட முயல்கிறது.ஆனால் அது பயனற்றது.நாடு நாளுக்கு நாள் பாதாளத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது.ஆளும் கட்சி எம்.பி.க்களுக்கு கல்வி அறிவு இல்லை.ஜனாதிபதியின் அதிகாரங்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.வர்த்தமானியை மாற்றியமைப்பது போன்று தற்போது இவர்கள் 20 ஐ பின்னுக்குத் தள்ள முயற்சிக்கின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களாக தூதுவர்களுடன் வாராந்திர கலந்துரையாடல்களை நடத்தி வருகிறோம்.சர்வதேச ஒத்துழைப்புக்கான முன்னாயத்தாயங்களை பல்பக்க முனையில் பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முயற்சிக்கிறது.

இழந்த அரசியல் சுதந்திரத்தையும் பொருளாதார சுதந்திரத்தையும் மீட்டெடுக்கும் நோக்கில் எதிர்வரும் 26 ஆம் திகதி கண்டியில் ஆரம்பமாகும் நடைபயணம் கொழும்பில் நிறைவடையவுள்ளது.

ஆப்கானிஸ்தான் தவிர்ந்த ஏனைய நாடுகளில் அன்னிய கையிருப்பு அதிகரித்தது ஆனால் எமது நாட்டில் தான் வெளிநாட்டு கையிருப்பு குறைந்துள்ளது.கோட்டாபய ராஜபக்ச வேட்பாளராகி முதல் செய்தியாளர் சந்திப்பை நடத்திய போது சில ஊடகங்களும் அந்த விடயங்களை முன்வைத்தன.தீர்வுகளை கோர முன்வந்தன.அப்போது கோட்டாபய நடந்து கொண்ட விதம் எனது தொலைபேசியில் உள்ளது.பொருளாதாரத்தை எப்படி நடத்துவது என்று கேட்டனர்.தூர நோக்கற்ற ஜனாதுபதி.

இவ்வாறு நடக்கும்போது எந்த மனிதனும் வாக்களிக்க மாட்டான்.ஆனால் நமது சில ஊடகங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை வைத்திருந்தன. நாட்டை பற்றி சிந்திக்கவில்லை.தற்போது வருந்துவதில் அர்த்தமில்லை என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.