ஜனாதிபதி நியமித்த புதிய அமைச்சரவையை ஏற்றுக்கொள்ள முடியாது, இது வெறும் கண்ணாமூச்சு விளையாட்டு மட்டுமே
ஜனாதிபதி இன்றைய தினம் (18) நியமித்த புதிய அமைச்சரவையின் அமைச்சு பதவிகள் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது என கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஜனநாயகத்தை முட்டி மோதி விட்டு, தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களை எமக்கும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
பௌத்த மாநாயக்க தேரர்களில் அறிக்கைக்கு அமைய தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனவும் அனைவரும் ஏற்க கூடிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
மாநாயக்க தேரர்களின் இந்த கோரிக்கையையும் கவனத்தில் கொள்ளாது, ஜனாதிபதி இன்று நியமித்துள்ளதாக கூறும் புதிய அமைச்சரவையை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இது வெறும் கண்ணாமூச்சு விளையாட்டு மட்டுமே. இது மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விடயமல்ல.
அதேவேளை ஆர்ப்பாட்டத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளவர்களை ஆயுதம் மற்றும் வன்முறையை பயன்படுத்தி விரட்டியடிக்க திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
அவ்வாறான செயல்கள் ஜனநாயக விரோதமானவை என்பதுடன் எவரும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒழுக்கமற்ற செயலாகவே கருதப்படும் என மெல்கம் ரஞ்சித் கூறியுள்ளார்.
கார்டினல் மெல்கம் ரஞ்சித் அவர்களே, இந்த விடயத்தில் நாம் அனைவரும் உங்களுடன்தான.
ReplyDelete