Header Ads



காலிமுக திடலுக்கு சென்ற சோபித்த தேரரும், மனோ கனேசனுடைய விமர்சனமும்..!!


- Mano Ganesan Mp -

சிங்கள பெளத்தர்  அல்லாத தமிழ், முஸ்லிம், இந்து, இஸ்லாம், கத்தோலிக்க இலங்கையருக்கு எதிராக கடும் கருத்துகளை பேசி, கோதாபயவை  ஜனாதிபதி ஆக்கியதில் பெறும் பங்காற்றிய ஓமல்பே சோபித தேரர் காலி முக திடலுக்கு சில தினங்களுக்கு முன் வந்தார்.  

அங்கிருந்தபடி அரசுக்கு எதிராக, போராட்டக்காரர் மத்தியில் உரையாற்றி, "பெளத்த புனித நீர்" என்று சொல்லி, ஏதோ நீரை (#GotaGoHome மந்திர நீராம்.!)  ஒரு குவளையில் போட்டு, ஜனாதிபதி செயலக வாசலுக்கு அனுப்பி தெளிக்க வைத்தார். 

இது எப்படி இருக்கு? 

இப்படியே போனால்,  களனிகங்கை இரண்டாய் பிளந்து, பாதாள உலகிலிருந்து நாகராஜ நாகம் எழுந்து வந்து "நாட்டை காப்பாற்ற கோதா என்ற மன்னன் வருகிறான்" பராக்.. என்று தன்னிடம்   சொன்னதாக கடந்த  2019ம் வருட தேர்தலின் போது உலகை உலுக்கிய பொய்யை சொன்ன "கொள்ளுபிட்டியே சங்கரக்கித" என்ற களனி ரஜமஹா விகாராதிபதி  தேரரும், நாளை காலிமுக கடற்கரை திடலுக்கு வருவார். 

அங்கு வந்து, "கடல் பிளந்து, சமுத்திரராஜன் எழுந்து வந்து தன்னிடம் ஏதோ சொன்னான்" என இன்னொரு கதையை இவர் அள்ளி  விடலாம்.

ஆகவே இந்த பிக்குகளின் புதிய முயற்சிகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். 

இதனால்தான் நேற்று மங்கள சமரவீர  நினைவு நிகழ்வில் மத தலைவர்களை, அரசியலிலிருந்து விலக்கி, குறிப்பாக பிக்குளை அவர்களது விகாரைகளிலேயே  வைக்க வேண்டும் என்று நான் சிங்களத்திலேயே சொன்னேன்.

மத தலைவய்கள் நேரடி அரசியலில் வேண்டாம். எல்லா மத தலைவர்களுக்கும் இது பொதுவானது என்றுதான் சொல்கிறேன். 

ஆனால் நம் நாட்டில் பெளத்த தேரர்களுக்குதான் விசேட சலுகைகள் உள்ளன. அவர்கள் தான் இந்நாட்டை இந்த நிலைமைக்கு தள்ளி விட்டவர்கள் வரிசையில் முதலாமிடத்தில் இருக்கிறார்கள். 

ஆகவே இந்த "மதசார்பின்மை" நடக்காவிட்டால் இந்நாட்டுக்கு விடிவில்லை..!


Mano Ganesan Mp

No comments

Powered by Blogger.