நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு, விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட போராட்டம் அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அதிகாரத்திற்கும் அடிபணியும் காலம் கடந்து விட்டது. எனவே எவ்வித பேதமும் இன்றி அனைத்து மக்களும் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு தலைவணங்கி ஜனாதிபதி , பிரதமர் , அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டாபய ராஜபக்ஷவிற்கு 65 சதவீத வாக்குகளை வழங்கிய அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் இன்று அவர் பதவி விலக வேண்டும் எனற நிலைப்பாட்டில் ஒன்றிணைந்து போராடுகின்றனர் எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
Post a Comment