நிதி அமைச்சு விசேட சுற்றறிக்கை வெளியீடு, அரச செலவினங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை
அரச செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை நேற்று நிதியமைச்சு வெளியிட்டுள்ளதுடன் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள், மாகாணசபைகளின் பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள்,மாவட்ட செயலாளர்கள், அரச கூட்டுத்தாபன மற்றும் சபைகளின் தலைவர்களுக்கும் நிதி அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது..
அரச துறையில் ஆட்சேர்ப்புகளை இடைநிறுத்தல் திட்டங்களுக்கான செலவினங்களை கட்டுப்படுத்தல், எரிபொருள் பாவனைகளை கட்டுப்படுத்தல், தகவல் தொடர்பு செலவுகள் மற்றும் ஏனைய செலவினங்களை கட்டுப்படுத்தல் இதனூடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது செலவினங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
Post a Comment