Header Ads



அமைச்சர்களை மாற்றி தீர்வு காணமுடியாது, ஜனாதிபதி பதவி விலக வேண்டும், இடைக்கால அரசாங்கம் என்பது நாடகம்


அரசியல் கட்சிகளின் வழி நடத்தல் இன்றி வீதியில் இறங்கி போராடும் மக்கள் ஜனாதிபதி பதவி விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றே கோருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதனால், அமைச்சரவையை மாற்றியமைப்பதன் மூலமோ இடைக்கால அரசாங்கம் என்ற நாடகம் மூலமோ நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இடைக்கால அரசாங்கமோ அல்லது வேறு அரசியல் நாடகங்களோ தொடர்ந்தும் செல்லுப்படியாகாது என்பதால், மக்களின் கோரிக்கைக்கு தலை வணங்கி, ஜனாதிபதி உடனடியாக பதவி விலகி வீட்டுக்கு செல்ல வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் வீதியில் இறங்க முடியாத நபர் தொடர்ந்தும் நாட்டின் தலைவராக செயற்பட தகுதியில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Rajapaksa family and their followers are the Thieves, Robbers, and Mafias who cheated ordinary people; mismanaged our country, mishandled our reserve funds, and stole the public money without limit.

    They are the main problem for the current economical crisis and the mess.
    They think that Sri Lanka is their own property and that the people are slaves to them.
    All the Sri Lankans together should wake up and get rid of the DEVILS permanently.

    No more Devils and the Followers !

    ReplyDelete
  2. Rajapaksa family and their followers are the Thieves, Robbers, and Mafias who cheated ordinary people; mismanaged our country, mishandled our reserve funds, and stole the public money without limit.
    They are the main problem for the current economical crisis and the mess.
    They think that Sri Lanka is their own property and that the people are slaves to them.
    All the Sri Lankans together should wake up and get rid of the DEVILS permanently.
    No more Devils and the Followers !

    ReplyDelete

Powered by Blogger.