இப்போது இல்லாவிட்டால் எப்போது...?
- ருக்கி டி சில்வா -
இது எனது மனைவி யசோதரா அரவவெல.
அவர் ஏழரை மாத கர்ப்பிணி கர்ப்பகாலத்தில் இடுப்பு எலும்புகளின் அதிக அசைவினால் ஏற்படும் வலியினால் அவதிப்படும் அவரை நடக்கும் போது கைத்தடி போன்ற ஒன்றை பயன்படுத்துமாறு மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மிகவும் கடினமான வலிமிகுந்த விடயம் என்றபோதிலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவேண்டியது தனது கடமை என மனைவி கருதுகின்றார்.கோ ஹோம் கோத்தா இயக்கத்தில் ஒவ்வொரு நாளும் பங்கெடுக்கவேண்டியது தனது கடமை என அவர் கருதுகின்றார் ஆனால் தற்போது ஒருநாளைக்கு இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரம் கலந்துகொள்ள அவர் இணங்கியுள்ளார்.அவரது மன உறுதியை எதுவும் தடுக்க முடியாது போல தோன்றுகின்றது.
அவரது வாழ்க்கையின் ஒரு பகுதியாகயிருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்-தேசத்திற்கான சிறந்த எதிர்காலத்திற்கான போராட்டத்திற்கு அவர் வழங்கியுள்ள சிறிய பங்களிப்பு குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன்.
இப்போது இல்லாவிட்டால் எப்போது?
Post a Comment