Header Ads



ஒரு வருடத்திற்கு தங்களிடம் நாட்டை, ஒப்படைக்குமாறு நிபுணர்கள் குழு கோரிக்கை


இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்த்து நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு நிபுணர்களால் முடியும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சமூகவியல் சிரேஷ்ட பேராசிரியர் மயூர சமரகோன் தெரிவித்துள்ளார்.

ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நியமனங்கள் வழங்கப்படுமாயின் இந்த விடயத்தில் தலையிட நிபுணர்கள் குழுவொன்று ஏற்கனவே தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டை ஆட்சி செய்ய முடியும். நிபுணர்கள் நாட்டை ஏற்க தயாராக இருக்கின்றோம்.

நான் உள்ளிட்ட நிபுணர்கள் குழுவினர் நாட்டை ஏற்க தற்போது தயாராக உள்ளோம். ஒரு வருடத்திற்கு வழங்குங்கள். அனைத்து வரப்பிரசாதங்களும் பெற்றுக் கொண்டு அமைச்சராக செயற்படுவதற்கு நாங்கள் நாட்டை கேட்கவில்லை. அவ்வாறான ஒன்றும் தேவையில்லை.

அரசியலமைப்பில் உள்ள சட்டத்திற்கமைய, நிபுணர்களை அமைச்சரவை அமைச்சர்களாக ஒரு வருடத்திற்கு நியமிக்க வேண்டும். நாட்டின் நெருக்கடியை சமாளிப்பதற்கே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்குள் நாட்டிற்கு தேவையான அனைத்தையும் செய்து முடிந்தளவு நாட்டை மீட்டுக்கொடுப்பதற்கு நாங்கள் தயராக இருக்கின்றோம். அரசியல்வாதிகளால் தற்போது நாட்டை ஆட்சி செய்ய முடியாதென்ற நிலைமையே மக்கள் மனநிலையில் உள்ளது. இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கு அரசாங்கத்தினால் முடியவில்லை.

இவ்வாறான நிலையில் அரசியல்வாதிகளின்றி எங்களால் நாட்டை முன்னேற்ற முடியும். எதிர்வரும் நாட்கள் மிகவும் தீவிரமாக உள்ளன. நாட்டில் மருந்துகள் இல்லை. மக்கள் இறந்து போகலாம்.

மின்சாரம் இல்லாமல் போகலாம் அல்லது இரண்டு மணித்தியாலங்களுக்கு என மட்டுப்படுத்தலாம். அவ்வாறான மிக மோசமான நிலைமையில் நாடு உள்ளது.

உலகளவில் மிக நெருக்கடிக்குள்ளாகியுள்ள நாடாக தற்போது இலங்கை மாறியுள்ளமையினாலேயே நிபுணர்களான நாங்கள் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. very good, warm welcome!!! Most of the Sri Lankan politicians are corruption bigots, robbed most of the treasures of the country, so this will be the most suitable solution...

    ReplyDelete

Powered by Blogger.