Header Ads



இன்று காலி முகத்திடலுக்கு செல்லவுள்ள அதிபர்களும் ஆசிரியர்களும்..!!


அரசாங்கத்திற்கு தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் இன்று (25) சுகவீன விடுமுறைக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பதவி விலகாது, அமைச்சர்களை நியமித்துள்ளது.

எனினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள் மற்றும் பல பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், பாடசாலைகள் பாதிக்கப்படுகின்றன.

அதிக போக்குவரத்து செலவுகள் காரணமாக மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்ல முடியவில்லை,

பாடசாலை வாகனங்களும் தங்கள் கட்டணங்களை உயர்த்தியுள்ளன.

இந்த கண்டித்தே இன்று சுகவீன விடுமுறை போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பல ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் காலி முகத்திடலுக்கு வர தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

No comments

Powered by Blogger.