Header Ads



அனுருத்த பண்டார கைது - யார் தெரியுமா இவர்..?


கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் அனுருத்த பண்டார, மோதர பொலிஸ் குற்ற விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மோதரை பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள்  ஆணைக்குழுவைச் சேர்ந்த சிலர் பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர்.

இளம் ஊடகவியலாளரும் சமூக ஊடக ஆர்வலருமான அனுருத்த பண்டார, அரசாங்கத்துக்கு எதிரான பேஸ்புக் பக்கத்தின் நிர்வாகியாகவும் செயற்பட்டுள்ளார்.

மோதரை பொலிஸில் இருந்து வந்ததாக கூறிக்கொள்ளும் குழுவினால் நேற்று இரவு அவர் கடத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியிருந்தது.

எனினும், மோதரை பொலிஸ் நிலையத்தில் அவ்வாறான ஒருவர் இல்லை என அதிகாரிகள் தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியது.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இந்நிலையிலேயே, அவர் மோதர பொலிஸ் குற்ற விசாரணை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2

கோ கோத்தா ஹோம் போராட்டத்தில் ஈடுபட்ட இளம் செயற்பாட்டாளர் கைது 

இன்று காலை பொலிஸார் எனதங்களை அடையாளப்படுத்தியவர்களால் வீட்டிலிருந்து அழைத்துச்செல்லப்பட்ட சிவில் உரிமை செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார தற்போது மோதரை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை தங்களை மோதரை பொலிஸார் என தெரிவித்தவர்கள் அவரை அவரது வீட்டிலிருந்து அழைத்து சென்றனர். 

இதேவேளை முன்னதாக அனுருத்த பண்டாரவை கண்டுபிடிக்க உதவுமாறு கோரி இளம் பத்திரிகையாளர்கள் சங்கம்  இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தது.

தங்களை பொலிஸார் என அடையாளப்படுத்தியவர்களால் அவர் இன்று காலை கைதுசெய்யப்பட்டார் எனினும் மோதரை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி அவ்வாறு எவரும் கைதுசெய்யப்படவில்லை என தெரிவித்தார் என ஊடகவியலாளர் அமைப்பு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

எனினும் மோதரை பொலிஸ் நிலையத்தின் குற்றவிசாரணை பிரிவினரே தாங்களே அவரை சில வேளைக்காக அழைத்து சென்றனர் என அனுருத்த பண்டாரவின் தந்தை தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.