ஜனாதிபதி பங்கேற்பாரா, இல்லையா..? தொடர்பு கொள்ள முடியாதுள்ளததாக ஏற்பாட்டாளர்கள் கவலை - இம்தியாஸ் உரையாற்றுகிறார்
புகழ் பெற்ற முன்னனி பௌத்த பாடசாலையான கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழம்பெரும் அதிபர் மறைந்த கேணல் ஜி.டபிள்யூ ராஜபக்ஷவின் வாழ்க்கை வரலாறுகள்(1960-1980) உள்ளடங்கிய சிசிர திஸாநாயக்க அவர்களால் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழா கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி செவ்வாய்கிழமை பிற்பகல் 05.00 மணிக்கு கல்லூரியின் குலரத்ன கேட்போர் கூடத்தில் இடம் பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதம அதிதியாக பங்கேற்பதாக ஏலவே அறிவித்திருந்தாலும், குறித்த தினத்தில் அவரின் வருகையை உறுதி செய்ய ஏற்ப்பாட்டுக் குழு பல முறை தொடர்பு கொள்ள முயன்ற போதும் முடியாமல் போனதாக பிரபல வாராந்த ஆங்கிலம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிகழ்வில் சிறப்புக் கருத்துரையினை பழைய மாணவர் சங்கத்தின் அழைப்பின் பெயரில் ஆனந்த கல்லூரியின் பழமைய மாணவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் நிகழ்த்தவுள்ளார்
Post a Comment