காலிமுகத் திடல் போராட்டத்திற்கு பெருகுகிறது ஆதரவு
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு கோரி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில் சட்டத்தரணிகள் சிலர் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இருந்து இன்று பிற்பகல் பேரணியாக காலி முகத்திடலை சென்றடைந்ததாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காலி முகத்திடல் எதிர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நாட்டின் சிரேஷ்ட கலைஞர்கள் பங்கேற்றிருந்தனர்.
பாடகி நந்தா மாலனீ,கலாநிதி சுனில் ஆரியரத்ன, நடிகை சுவர்ணா மல்லவாராச்சி ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதுதவிர, ஓமல்பே சோபித்த தேரர், கலாநிதி அகலகட சிறிசுமன தேரர் உள்ளிட்ட மகா சங்க சபையை சேர்ந்த சிலர் காலி முகத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இதேவேளை, ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ராவணா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் தலைமையில், கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கத்திற்கு முன்பாக இன்று ஆரம்பமான பேரணி, விகாரமகாதேவி பூங்காவிற்கு சென்று நிறைவடைந்துள்ளது.
Post a Comment