லைலதுல் கத்ர் இரவை அடைவதற்கு, இலகுவான சில வழி முறைகள்...!
(மொழியாக்கம் செய்யப்பட்டது)
*கண்ணியத்திற்குரியவர்களே*...!
💫அசாதாரண சூழ்நிலையில் இந்த ரமழானை நமக்கு அல்லாஹ் அடைய செய்து, *ரமழானில் கடைசி பகுதியை தற்போது வெகுமதியாக வழங்கி இருக்கிறான்*.
*அல்ஹம்து லில்லாஹ்* !
💫 *கோடி, கோடியாக செலவழித்தாலும் கிடைக்காத நன்மைகளை, அல்லாஹ் ஒரு சதம் செலவில்லாமல் வாரி வழங்குகிறான்*.
💫 *கிட்ட தட்ட 83 ஆண்டுகள் வணங்கிய நன்மைளை இழந்து விடாதீர்கள்.*
*💫அரசன் முதல் ஆண்டி வரையும்,* *செல்வந்தர்கள் முதல் ஏழை வரையும் அனைவருக்கும் சமமாக நன்மைகளை பெற்றுக் கொள்ள* *அல்லாஹ் வழிசெய்துள்ளான்*.💎
_💫அந்த இரவு மஃக்ரிப் முதல் பஜ்ர் நேரம் வரையாகும்._
*1️⃣ மஃக்ரிபை தொழுது விட்டு, இஷா வரை குர்ஆனை ஓதி வாருங்கள்.*
2️⃣இஷாவை தொழுது முடித்து விட்டு, இரவு தொழுகையிலிருந்து முதல் *இரண்டு ரக்அத்துகளை நன்றாக நேரம் எடுத்து தொழுங்கள்*.
3️⃣அடுத்த இரண்டு ரக்அத்துகள் தொழுவதற்கு முன் சற்று ஒய்வெடுத்து, *குர்ஆனிலிருந்து அரை ஜூஸ்வையோ, அல்லது ஒரு ஜூஸ்வையோ பார்த்து ஓதுங்கள்.*
தர்ஜமாவை ஓதிக் கொள்ளுங்கள்
4️⃣) இப்படியே ஒவ்வொரு இரண்டு ரக்அத்துகளுக்கு இடையில் செய்து கொள்ளுங்கள்.
*5️⃣இரவு தொழுகையில் ஆறு ரக்அத்துகளையோஅல்லது எட்டு ரக்அத்துகளையோ தொழுது விட்டு, மீதியை கடைசி இரவில் தொழுவதற்கு வைத்துக் கொள்ளுங்கள்.*
6️⃣சில திக்ருகளையும், ஸலவாத்தையும் எழுதி பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
சில திக்ருகளை கடைசியில் குறிப்பிடுகிறேன்.
7️⃣ இந்த முதல் கட்ட அமல்களை இரவு *11 மணிவரை அல்லது இரவு 12 மணிவரை ஆர்வத்தோடு, திருப்திகரமாக செய்யுங்கள்*.
8️⃣ அதன் பிறகு மூன்று மணி நேரம் தூங்கி 2 மணிக்கோ, அல்லது 3 மணிக்கோ மீண்டும் எழுந்து மீதி இரவு தொழுகையை *நன்மையை எதிர்ப் பார்த்து தொழுகுங்கள்.*
9️⃣ கடைசி இரவில் உங்களது *துஆகளை மிகவும் உருக்கமாகவும், கண்ணீருடனும் ஸஜ்தாவிலிருந்து கேளுங்கள்.*
📌📌 _பாவமன்னிப்பை{ தவ்பா}அதிகப்படுத்துங்கள்.. (500 க்கு மேல் ) ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ×100 பிரித்து செய்யுங்கள்_
*🌺أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ*
*அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி*
_நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்._
🔟 🤔இன்று லைலத்துல் கத்ர் இரவாக இருக்குமோ ⁉️என்ற எதிர்ப்பார்ப்பில் முழு மனதுடன் வழி படுங்கள்.💖
*1️⃣1️⃣ ஒவ்வொரு நாளும் இப்படியே செய்து வாருங்கள்.*
1️⃣2️⃣ஆரம்ப இரவில் களைப்பை போக்குவதற்கு *☕டீ, காப்பி, பிளேன் டீ போன்றவற்றை நேரத்தோடு 🫖 பிளாஸ்கில் மொத்தமாக ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.*
1️⃣3️⃣ மேலும் களைப்பை போக்குவதற்கு இடை, இடையே *வாசலுக்கு வந்து 🌈வானத்தை அண்ணார்ந்து பார்த்து இன்று லைலதுல் கத்ராக இருக்குமோ🤔 என்று உங்கள் 💞மனதோடு பேசிக் கொள்ளுங்கள்.*
1️⃣4️⃣ *_ஒன்றை இழந்தால் ஒன்றை அடையலாம்_* என்பதற்கு இணங்க இந்த இரவுகளில் *_தூக்கத்தை இழந்து நன்மைகளில் ஈடுபட்டால் நிச்சயம் இறையருளால் அந்த லைலதுல் கத்ர் இரவையும், அதன் நன்மைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.🏆_*
1️⃣5️⃣ ஒவ்வொரு ஸஜ்தாவிலும் வேண்டிய துஆகளை கேட்பதோடு, குறிப்பாக ஸஜ்தாவிலே
*அல்லாஹூம்ம இன்னக்க அfபுவுன் துஹிப்புல் அFப்வ FபஃFப் அன்னீ*
என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள்.
1️⃣6️⃣ அதிக நன்மைகளை கொண்டுள்ள சில திக்ருகள்...
👇🏻👇🏻👇🏻👇🏻
*✳️லா ஹவ்ல வலா குவத்த இல்லா பில்லாஹி.*
*✳️ சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி,சுப்ஹானல்லாஹில் அழீம்*
*✳️ சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி* (100முறை )
*✳️லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து,வஹு அலா குல்லி ஷையின் கதீர்* (100முறை )
*✳️ லா இலாஹ இல்லா அன்த, சுப்ஹானக இன்னீ குன்து மினல் லாளிமீன்.*
*✳️ சுபஹானல்லாஹ்* ( நூறு முறை )
*✳️லாஇலாஹ இல்லல்லாஹ்*( நூறு முறை )
*✳️சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வ லாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்*
1️⃣7️⃣ இது போல உங்களுக்கு விருப்பமான முறையில்🗒️ அட்டவணையை தயாரித்து *இந்த கடைசி பத்து இரவுகளிலும் விழித்திருந்து குடும்பத்தோடு அமலில் ஈடுபடுங்கள்.*
*_1️⃣8️⃣ 🧕🏻மாதவிடாய் பெண்கள் தொழுகை மட்டும் விட்டு, விட்டு ஏனைய அமல்களில் இரவு நேரத்தில் ஆர்வத்தோடு நீங்களும் ஈடுபடுங்கள்._*
1️⃣9️⃣ சோதனைகளுக்கு மத்தியில் உங்களுக்கு கிடைத்த ஓய்வையும், ஆரோக்கியத்தையும் சரியாக பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
*_🤲🏼அல்லாஹ் இந்த லைலதுல் கத்ர் இரவின் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக !_*
*💐இன்ஷா அல்லாஹ் பதியப்படும் பதிவுகளை உங்கள் குடும்பத்தாரிடமும் உங்கள் நண்பர்களிடமும் உங்கள் உறவினரிடம் தெரியப்படுத்துங்கள்.*
_📤 இதை அனைவருக்கும் பகிரவும்..._
💡“நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்”
ஸஹீஹ் முஸ்லிம் , 3846
மொழியாக்கம்: உமைரா நூருல் ஹம்ஸா.
Post a Comment