முஸ்லிம் அரசியல்வாதிகளின் இல்லங்களை சுற்றி வளையுங்கள் - அஸாத் சாலி
தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அஸாத் சாலி விடுத்துள்ள விஷேட அறிக்கை
தற்போதைய அரசாங்கம் தமது அத்தியாவசியத் தேகைளில் கவனம் செலுத்தி சமையல் எரிவாயுஇ எரிபெருள் பால்மா மற்றும் உணவுப் பொருள்களைப் பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் அவசரகாலச் சட்டம்இ ஊரடங்குச் சட்டம் என்பனவற்றையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் இறங்கி தமது அன்றாட வாழ்வுரிமைக்காகவும் வாழ்வாhரத்துக்காகவும் போராடி வருகின்றனர். இவ்வேளையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பனவற்றின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தமது உரிமைகளுக்காகப் போராடும் பெரும்பான்மையான மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்து மக்களுக்கு ஆதரவாகவே நடந்து கொள்ள வேண்டும்.
இன்று சாதாரண நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த குடும்பங்களில் ஒவ்வொரு அங்கத்தவரும் வௌ;வேறு பொருள்களுக்காக நாள்தோறும் வௌ;வேறு வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தினசரி கூலிக்கு வேலை செய்யும் மக்கள் தமது அன்றாட வருமானத்தை இழந்துள்ளனர். பலர் பட்டினியின் கொடுமையை அனுபவிக்கத் தொடங்கி உள்ளனர். முஸ்லிம்கள் இந்தப் புனித மாதத்தில் நிம்மதியாக இறைவழிபாடுகளில் ஈடுபட முடியாதவாரும்இ தமது நோன்பு கால அன்றாட தேவைக்கான பொருள்களைக் கூட பெற்றுக் கொள்ள முடியாமலும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர். இந்த நிலை இந்த நாட்டு மக்கள் மீது அரசாங்கம் இழைத்துள்ள மாபெரும் குற்றமாகும். இந்த நிலையை நீக்குவதற்கான வழிவககளைக் கண்டறிய வேண்டிய பொறுப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சார்ந்ததாகும். இவ்வளவு காலமும் சமூகத்தை மறந்து தமக்கு வாக்களித்த மக்களை புறக்கணித்து அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைத் தூக்கி எறிந்து சுகபோகங்களுக்கும் சுயநலத்துக்கும் ஆசைப்பட்டும் அடிமைபட்டும் நடந்து கொண்டது போல் இனி;வரும் நாற்களிலும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொள்ளக் கூடாது என நான் வேண்டிக் கொள்கிறேன். இனியாவது அவர்கள் மக்களுக்கு ஆதரவாக செயற்பட வேண்டும்.
முஸ்லிம் மக்கள் தமது பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகளின் இல்லங்களை சுற்றி வளையுங்கள். மக்கள் போராட்டத்துக்கு அதரவளிக்குமாறு அவர்களை வற்புறுத்துங்கள். இந்த அரசின் தோல்விகளை ஒப்புக் கொள்ளுமாறு அவர்களை நிர்ப்பந்தியுங்கள். மக்களின் கொழுந்து விட்டு எரியும் பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறு அவர்களை வற்புறுத்துங்கள். மக்களின் அடிப்படை உரிமைகள் அரசாங்கத்தால் மறுக்கப்படுகின்றமையை எதிர்த்து குரல் கொடுக்குமாறு அவர்களுக்கு நெருக்குதல் கொடுங்கள்.
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதும் இந்த அரசாங்கத்தின் அடக்குமுறைக்கும் கொடுங்கோல் ஆட்சிக்கும் எதிராக முஸ்லிம்களும் தமது நகரங்களில் திரண்டு தமது எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டும் எனவும் நான் கேட்டுக் கொள்கிறேன். சகித்துக் கொள்ள முடியாத இந்த ஆட்சிக்கு எதிராகவும்இ நாட்டின் இன்றைய நிலைமைகளுக்கு காரணமான அரசைக் கண்டித்தும் பொரும்பாலான மக்கள் வீதிகளில் இறங்கி உள்ள வேளையில் நாமும் இந்த நாட்டுப் பிரஜைகள் என்ற வகையில் அவர்களோடு கைகோர்த்து செயற்பட முன்வர வேண்டும் என முஸ்லிம் மக்களை நான்; கேட்டுக் கொள்கிறேன்
Post a Comment