மரணப் படுக்கையில் அரசாங்கம், எனக்கு பிரதமர் பதவியை தர அழைப்பு - இடைக்கால அரசாங்கத்தை நிறுவ மாட்டேன் - சஜித்
சுமார் 150 ஆசனங்களுடன் இரண்டரை வருடங்களாக மரணப்படுக்கையில் இருந்த அரசாங்கம், இப்போது கூட்டணி ஆட்சிக்கு வாருங்கள் என்கிறார்கள்.வந்து பிரதமர் பதவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்கள்.வந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால், யாருடைய மனதையும் கெடுக்கும் நோக்கில் திருட்டு அரசாங்கத்தை அமைக்க நாங்கள் தயாராக இல்லை.மக்கள் அபிப்பிராயத்தின் மூலம் ஆட்சி அமைக்கவே தயாராக உள்ளோம்.ராஜபக்சர்களுடன் ஒரு டீலை மேற்கொள்வதை விட வீட்டுக்குச் செல்வது எனக்கு சுகம்.இரண்டரை வருடங்களாக நாட்டை குட்டிச்சுவராக்கி, நாட்டையே அழித்துவிட்டு இப்போது பொய் இரக்கைகளை அணிவிக்க வருகிறார்கள்.அந்த இரக்கைகளை அணிய நாங்கள் தயாரில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கொடுங்கோல் அரசின் அடக்குமுறை சார்ந்த மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (23) கொலன்ன தேர்தல் தொகுதியின் எம்பிலிப்பிட்டிய நகரில் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் கொலன்ன தேர்தல் தொகுதியின் அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹேஷா விதானகே ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி சமூக ஜனநாயக கொள்கை சார் வேலைத்திட்டத்தையே நடைமுறைப்படுத்துகிறது எனவும்,"இது தீவிர தாராளவாதத்தையே அல்லது உச்ச முதலாளித்துவத்தையே அல்ல" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment