Header Ads



தற்போதைய போராட்டங்களுக்கு பின்னால் யாரும் இல்லையென நினைக்க வேண்டாம்


இந்த போராட்டங்கள் உண்மையானவை, ஆனால், அந்தப் போராட்டங்களுக்குப் பின்பாக யாரும் இல்லையென நினைக்கவேண்டாம். சில சக்திகள் இருக்கின்றன என ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பியின் புரட்சியில் முதலில் கொல்லப்பட்டவர்கள், நந்தசேன ஆவார். ஜே.வி.பியின் முக்கியஸ்தரான அவர், அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கொல்லப்பட்டார்.

இந்நிலையில், பிரபாகரன் பலமடைந்து கொண்டு வந்தபோது, அமிர்தலிங்கத்தை கொன்றார். தங்களுடைய அணிக்குள் வளர்ந்துவருவோரே முதலில் கொல்லப்பட்டனர்.

பிள்ளைகள் வெளியேறினர் கோபம், அம்மாமார்கள் வீதிக்கு இறங்கினர் கோபம், அதனை ஆயுத போராட்டமாக மாற்றிவிடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

No comments

Powered by Blogger.